Spa Treat – Herbal Oil Bath for Hair and Body
₹175.00
- Description
- Additional information
Description
The oil massage helps to soften the skin and ease tired aching muscles. The application of oil on the scalp keeps the body cool during the hot season and free of heat-related ailments, while the hot water bath provides relieve from aches and pains, and leads to deeper, better sleep after the stresses of the week.
எண்ணெய் மசாஜ்
தலைக்கு
உடல் உஷ்ணமாக இருந்தாலும் குளிர்ச்சியான உடலைக் கொண்டிருந்தாலும் நல்லெண்ணெயை மிதமாக சூடுபடுத்தி கொள்ளவும். உள்ளங்கையில் பாதியளவு எண்ணெய் விட்டு தலையின் உச்சியில் சூடுபறக்க தேய்க்க வேண்டும். உள் ளங்கை சூடா உச்சி சூடா என்பதற்கேற்ப அனல் பறப்பதை நீங்களே உணர்வீர்கள்.
அதன்பிறகு தலையின் மயிர்க்கால்கள் முதல் வேர் வரை எண்ணெய் தடவி சீப்பு கொண்டு 100 முறை சீவ வேண்டும். இத னால் எண்ணெய் முடியின் வேர்க்கால்கள் முதல் மயிர்க்கால்கள் வரை நன்றாக பரவும். பொடுகு, செதில் பிரச்சனைகளும் நீங்கும்.
சருமத்துக்கு
சருமம் முழுவதும் எண்ணெய் தேய்க்க வேண்டும். குழந்தையின் சருமத்துக்கு
ஆயில் மசாஜ் செய்வோமே அது போன்று ஒவ்வொரு உறுப்பு மீதும் எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். சுத்தமான எண்ணெயாக இருந்தால் கண், காதுகளில் விடுவார்கள். கண்ணுக்கு எண்ணெய் கட்டு என்று இதற்கு பெயருண்டு.
கண்ணுக்கு எண்ணெய் கட்டுவதால் பார்வைத்திறன் கூர்மை அடையும் கண்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கும். காதுக ளும் அழுக்கின்றி இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது சுத்தமான நல்லெண்ணெய் என்பது கேள்விக்குறியாக இருக்கும் போது இந்த எண்ணெய் கட்டு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
மூட்டுகளுக்கு
உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து குளித்தாலும் மசாஜ் செய்தாலும் உடலில் மூட்டுகள் இருக்கும் இடத்தில் அதிகப்படி யான எண்ணெய் வைத்து தேய்த்து மசாஜ் செய்வது நல்லது.
வாதம், இடுப்பு, முழங்கால் வலி, மூட்டுவலி பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு எண்ணெய் குளியல் இதமாக இருக்கும். மூட்டுகளில் தளர தளர எண்ணெய் வைத்து நன்றாக ஊறவிட்டு குளிக்கும் போது சரும துவாரங்கள் வழியாக எண்ணெய் உள்ளே செல்வதால் வலியின் தீவிரம் குறையத்தொடங்கும்.
இவை தொடரும் போது மூட்டுகளில் வலியின்மையை உணரலாம். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே எண்ணெய் குளிய லும் மூட்டு பகுதிகளில் எண்ணெய் மசாஜ் செய்வதும் வளர்பருவத்தில் அவர்களது மூட்டுகளை வலுவாக வைத்திருக்கும்.
சைனஸ், ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் எண்ணெய் குளியலைத் தவிர்க்க வேண்டியதில்லை.மாறாக எண்ணெய் குளி யலின் போது மூலிகை தைலத்தை எண்ணெயில் கலந்து பயன்படுத்தலாம். அதிக நேரம் காத்திருக்காமல் எண்ணெய் மசாஜுக்கு பிறகு இருபது நிமிட நேரத்தில் குளித்துவிடலாம்.
எப்போதெல்லாம் எண்ணெய்
தினமும் எண்ணெய் குளியல் கூடாது ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள் ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும் என்று வரையறுத்திருக்கிறார்கள் முன்னோர்கள். இதற்கு ஆன் மிக ரீதியான காரணங்களும் உண்டு.
ஆன்மிகம் தவிர்த்து அறிவியலும் எண்ணெய் குளியல் ஆரோக்கியத்தைத் தருவதாக கூறியிருக்கிறது. பொதுவாக எண் ணெய்க் குளியல் எடுக்கும் போது அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் எண்ணெய் தேய்த்து ஊறவைத்து குளிக்க வேண் டும். எண்ணெய் குளியலுக்குப் பிறகு குளிர்ந்த நீரைப் பயன்படுத்தாமல் மிதமான வெந்நீரையே பயன்படுத்த வேண்டும்.
Additional information
Grams | 250 Ml |
---|